PTI
செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் அல்லு அர்ஜுன் நலம் விசாரிப்பு!

செகந்திராபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜை சந்தித்தார்

DIN

ஹைதராபாத் : ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி ‘புஷ்பா 2’ படம் பார்க்கச் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மகன் ஸ்ரீ தேஜ் செகந்திராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது புஷ்பா - 2 படத் தயாரிப்பாளர் தில் ராஜுவும் உடன் வருகை தந்திருந்தார். பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

இதையொட்டி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு புஷ்பா - 2 படக் குழுவினா் ரூ.2 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT