சின்ன திரை தொடர்கள்... 
செய்திகள்

எதிர்நீச்சல் -2 வரவேற்பு குறைவு: இந்த வார டிஆர்பி பட்டியல்!

எதிர்நீச்சல் 2 தொடருக்கு கடந்த வாரம் இருந்ததை விட இந்த வாரத்துக்கு டிஆர்பி புள்ளிகள் குறைந்துள்ளது.

DIN

எதிர்நீச்சல் 2 தொடருக்கு கடந்த வாரம் இருந்ததை விட இந்த வாரத்துக்கு டிஆர்பி புள்ளிகள் குறைந்துள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 5 தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

5வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் ராமாயணம் தொடர் உள்ளது. மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இத்தொடர் 8.59 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

4வது இடத்தில் மருமகள் தொடர் உள்ளது. இத்தொடரில் கேப்ரியல்லா - ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 9.01 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

3வது இடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் ஸ்வாதி கொண்டே - நியாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 9.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

2வது இடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. மணீஷா மகேஷ் - அமல்ஜித், தர்ஷா கெளடா - விக்ரம் செல்வா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். டிஆர்பி பட்டியலில் இத்தொடர் 9.86 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதலிடத்தில் கயல் தொடர் உள்ளது. சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சன் தொலைக்காட்சியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகிய எதிர்நீச்சல் 2 தொடர் முதல் 5 இடங்களில் இல்லை. கடந்த வாரம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் 2 இந்த வாரம் டிஆர்பி பட்டியலில் சற்று பின்தங்கியுள்ளது. இத்தொடர் 7.16 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT