நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.
இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.
இதையும் படிக்க: ‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளான்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வரவில்லை.
புத்தாண்டு அன்று அறிவிக்கப்படலாம் என ரசிகர்களிடம் ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கான எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய விடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், அடுத்தது ’சூப்பர் சாகா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இது, ஜெயிலர் - 2 அறிவிப்பு என்பது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.