செய்திகள்

ரூ. 150 கோடியைக்கூட வசூலிக்காத கேம் சேஞ்சர்!

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் வசூல் குறித்து...

DIN

நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் வணிக ரீதியிலான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.

இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் ஜன. 10 வெளியானது. அரசியல் கதையாக உருவான இது கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால், வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், முதல் நாள் வசூலாக கேம் சேஞ்சர் ரூ. 186 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், உண்மையில் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் திரையரங்க வசூலில் இதுவரை ரூ. 150 கோடிகூட வசூலிக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் ரூ. 170 கோடிக்கும் அதிகமாக கூறப்பட்டிருந்ததால் அதனை முறியடிக்கும் நோக்கத்துடன் போலியான வசூல் நிலவரத்தை தில் ராஜு வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குழப்பங்களுக்கு இடையே, தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் என அடுத்தடுத்த தோல்விப்படங்களைக் கொடுத்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

மயானம் அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து கிராம மக்கள் மனு அளிப்பு

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காரிமங்கலம் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT