ஆஷிகாவுக்கு பதிலாக களமிறங்கும் புதிய நடிகை படம் | இன்ஸ்டாகிராம்
செய்திகள்

மாரி தொடரில் ஆஷிகாவுக்கு பதிலாக பிரபல நடிகை!

மாரி தொடரில் நாயகியாக நடித்துவந்த நடிகை ஆஷிகா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.

DIN

மாரி தொடரில் நாயகியாக நடித்துவந்த ஆஷிகா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.

மாரி தொடரிலிருந்து ஆஷிகா வெளியேறுவது அத்தொடருக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக பிரபல நடிகையை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2022 ஜூலை முதல் மாரி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆஷிகா கோபால் படுகோனே நாயகியாகவும் ஆதர்ஷ் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி அமானுஷ்ய காட்சிகள் கொண்ட திரைக்கதையுடன் மாரி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக 800 எபிஸோடுகளைக் கடந்து மாரி தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில், இத்தொடரில் இருந்து விலகுவதாக நடிகை ஆஷிகா அறிவித்தார்.

புதிய தொடர்களில் நடிப்பதற்காக ஆஷிகா, இத்தொடரில் இருந்து விலகியிருக்கலாம் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இனி மாரியாக நடிக்க போவது யார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் மாரி தொடரில் ஆஷிகாவுக்கு பதிலாக நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியின் ரோஜா தொடருக்குப் பிறகு ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் பிரியங்கா நடித்துவந்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களால் அந்தத் தொடரிலிருந்து விலகினார்.

பிரியங்கா நல்காரி

ரசிகர்கள் மீண்டும் பிரியங்கா நல்காரியைக் காண ஆவலுடன் இருந்த நிலையில், ரோஜா 2 தொடரில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் இந்தத் தொடர் யூடியூபில் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே தற்போது மாரி தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸுக்குப் பிறகு அன்ஷிதாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

SCROLL FOR NEXT