பிரசவத்திற்காக விலகும் மெளனிகா! காத்து வாக்குல ரெண்டு காதல் தொடரில் புதிய நடிகை!
காத்துவாக்குல ரெண்டு காதல் தொடரில் நடிகை மெளனிகாவுக்கு பதிலாக டோனிஷா நடிக்கவுள்ளது குறித்து...
காத்துவாக்குல ரெண்டு காதல் தொடரில் நடிகை மெளனிகா விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக நடிகை டோனிஷா நடிக்கவுள்ளார். இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான கனா தொடரில் அன்பரசி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்ற அனில் செளத்ரி நாயகனாக நடிக்கிறார். தலைப்புக்கு ஏற்ப இத்தொடரில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.
பாண்டவர் இல்லம் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் லப்பர் பந்து படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்த மெளனிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா தயாரித்துவரும் இந்தத் தொடர், இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் இரு காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரில் ஈஸ்வரி பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை மெளனிகா, தற்போது கருவுற்றிருப்பதால், முழுமையாக ஓய்வெடுக்கவுள்ளார். இதனால், மெளனிகாவுக்கு பதிலாக நடிகை டோனிஷா இப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான கனா தொடரில் டோனிஷா நடித்துள்ளார். இதுமட்டுமின்றி கேரளத்திலும் சில தொடர்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் பலர் டோனிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மெளனிகாவும் நடிகர் சந்தோஷும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், விரைவில் இவர்கள் தங்கள் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளனர்.
tonisha kapileswarapu replaces Mounica Santhosh in Kaathuvaakkula Rendu Kaadhal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.