விஜய் 69 படப் பூஜை 
செய்திகள்

விஜய் 69: முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அப்டேட்.

DIN

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு படத்தின் முதல் பார்வை போஸ்டர் அல்லது பெயர் அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் - 69 படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜன. 26 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT