செய்திகள்

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா!

ராஜமௌலி படத்தின் நாயகியாகும் பிரியங்கா சோப்ரா...

DIN

இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி யாரை வைத்து புதிய படத்தை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது. தற்போது, நடிகர் மகேஷ் பாபு - ராஜமௌலி கூட்டணியில் படம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.

இப்படத்திற்காக, மகேஷ் பாபு தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பாக ஒரு பாடலைக் காட்சிப்படுத்த தென்னாப்பிரிக்காவில் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த ராஜமௌலி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மிக பிரம்மாண்டமாக பழங்குடியினர் ஆடும் பாடலாக இது உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் நாயகியாக நடிகை பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியபடி இருந்தன. இந்த நிலையில், ராஜமௌலி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாஸ்போர்ட்டுடன் சிங்கத்தை கூண்டில் அடைப்பதுபோன்ற விடியோவை வெளியிட்டு (சிங்கம் மகேஷ் பாவுவை குறிப்பிட) படத்தின் அறிவிப்பை வித்தியாசமாகத் தெரிவித்திருந்தார்.

அந்தப் பதிவில் நடிகை பிரியங்கா சோப்ரா. ‘இறுதியாக..’ என காமெண்ட் செய்துள்ளார். அதற்குப் பலர் விருப்பக்குறியிட்டு மகேஷ் பாபு படத்தில் இணைந்த பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT