செய்திகள்

முதலில் உங்கள் சாதியில் இதை செய்யுங்கள்... பா. இரஞ்சித்துக்கு மோகன். ஜி பதில்!

இயக்குநர் மோகன். ஜி பேட் கேர்ள் படத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார்...

DIN

இயக்குநர் மோகன். ஜி பேட் கேர்ள் படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட் கேர்ள் (bad girl).

இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகளையும் காதல் தேர்வுகளையும் மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாயகியாக அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். அமித் திரிவேதி இசையமைப்பில் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காய்ஷப் இணைந்து வழங்கும் இப்படத்தின் டீசர் நேற்று (ஜன. 26) வெளியிடப்பட்டது.

இந்த டீசரை பகிர்ந்த இயக்குநர் பா. இரஞ்சித், “பேட் கேர்ள் திரைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் தைரியமான, புத்துணர்ச்சியான படம். இதனை தயாரித்ததற்காக இயக்குநர் வெற்றி மாறன் பெரிய வரவேற்புக்கு தகுதியானவர். இப்படம் பெண்களின் போராட்டங்களையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் புதிய அலை சினிமா பாணியில் தனித்துவமாக சித்திரிக்கிறது. இயக்குநர் வர்ஷாவுக்கு வாழ்த்துகள். நடிகை அஞ்சலி சிவராமன் அற்புதமாக நடித்திருக்கிறார். தவற விடாதீர்கள்!” எனப் பதிவிட்டார்.

இப்பதிவைப் பகிர்ந்த இயக்குநர் மோகன். ஜி, “பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்திரிப்பது இந்தக் குழுவினருக்கு எப்போதும் தைரியமான புத்துணர்ச்சியூட்டும் படமாகவே இருக்கும். வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் குழுவினரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பிராமண தந்தை மற்றும் தாயை பழிவாங்குவது ஒன்றும் புதுமையானது அல்ல பழையது. உங்கள் சொந்த சாதி பெண்களிடம் இதை முயற்சித்து, உங்கள் குடும்பத்தினருக்கு முதலில் காட்டலாம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT