செய்திகள்

தன்பாலின காதலை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்: லிஜோமோல் ஜோஸ்!

காதல் என்பது பொதுவுடமை படம் குறித்து லிஜோமோல்..

DIN

நடிகை லிஜோமோல் ஜோஸ் தன்பாலினத்தவர்களின் காதல் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது.

முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் வரும் காதலர் தினமான பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி வழங்குகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகை லிஜோமோல் ஜோஸ் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து பேசினார். அதில், “காதல் என்றால் அனைத்தும் காதல்தான். இப்படத்தில் நடித்தபின்பே தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் குறித்த புரிதல் ஏற்பட்டது. இந்திய சினிமாவில் இவர்களைப் பற்றிய கதைகள் பெரிதாக இல்லை. பெரும்பான்மை மக்களின் இருபாலின காதல்கள் தரும் அழுத்தத்தால் சிறுபான்மையினரான தன்பாலின ஈர்ப்பாளர்கள் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளைப்போல தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இருப்பதும் சாதாரண உணர்ச்சிதான் அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்பதையே காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் பேசியிருக்கிறது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்கலை., இடையிலான பேட்மிண்டன் போட்டிகள்! தொடக்கி வைத்தார் உதயநிதி!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்தது - சுமார் 50% வாக்குகள் பதிவு!

பொங்கல் விடுமுறையில் மெரீனாவில் அலைமோதிய கூட்டம் - போக்குவரத்து நெரிசல்!

ஆளுங்கட்சியின் ஆயுதமாக தணிக்கை வாரியம்: கனிமொழி எம்.பி.

யு-19 உலகக் கோப்பை - இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT