குடும்பஸ்தன் போஸ்டர்.  
செய்திகள்

அமோக வரவேற்பு: வெளிநாடுகளில் வெளியாகும் குடும்பஸ்தன் திரைப்படம்!

நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் வெளிநாடுகளில் ரிலீஸாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பினால் வெளிநாடுகளிலும் ரிலீஸாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம்தான் குடும்பஸ்தன்.

இந்தப் படத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ளார். படம் பார்த்தவர்கள் ஒரு மிடில் கிளாஸ் நாயகனாக வாழ்ந்துள்ளதாக புகழ்கிறார்கள்.

சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப் படத்துக்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

குடும்பஸ்தன் திரைப்படம் இதுவரை ரூ. 8 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வெளிநாட்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனாடா, ஐக்கிய அரபு அமீரகம், வலைகுடா நாடுகளில் வெளியாகவிருக்கிறது.

ஜன.31ஆம் தேதி முதல் ஐயங்காரன் இண்டர்நேஷ்னல் இந்தப் படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பஸ்தன் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்னஞ்சிறு ரகசியமே... பவித்ரா!

டார்ஜிலிங் நிலச்சரிவு: உதவி எண்கள் அறிவிப்பு!

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

SCROLL FOR NEXT