செய்திகள்

பராசக்தி! இரண்டு படங்களையும் பதிவு செய்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்!

பராசக்தி பட பெயர் சர்ச்சை குறித்து...

DIN

நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரே பெயர் வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ள டீசரை நேற்று (ஜன.29) வெளியிட்டனர்.

அதேபோல், நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவரது 25-வது படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் தெலுங்கில் பராசக்தி என்றும் பெயரிட்ட போஸ்டரை பகிர்ந்தனர்.

இதனால் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரே பெயர் வைத்திருப்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதும் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் அறிக்கை வெளியிட்டுள்ளன. இருவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையாக பெயரை பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, சிவகார்த்திகேயனின் பராசக்தி தெலுங்கிலும் அதே பெயரிலே வெளியாகிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு படங்களையும் ‘பராசக்தி’ என்றே பதிவு செய்திருக்கின்றனர். எப்படி தயாரிப்பாளர்கள் சங்கம் இதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒரே பெயரை வழங்கியது என சர்ச்சை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT