FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காதல் என்பது பொதுவுடைமை டிரைலர்!

காதல் என்பது பொதுவுடைமை டிரைலர் வெளியானது...

Updated On : 31 ஜனவரி 2025, 10:04 am IST
பகிர்:

காதல் என்பது பொதுவுடைமை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் சமூகம் எப்படி கையாள்கிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை காதலர் தினத்தன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

லிஜோமோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு, மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ என சான்றிதழ் அளித்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். தன்பாலின காலதை குடும்பமும் சமூகமும் எப்படி கையாள்கின்றன என்பதை படபடப்புடன் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments