முகப்பு
செய்திகள்

விக்ரம் - 2 வருமா? கமல் பதில்!

விக்ரம் - 2 குறித்து கமல்ஹாசன்.....

Updated On : 31 ஜனவரி, 2025 at 6:28 AM
கமல்ஹாசன்
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் - 2 குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் கூலி படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றார். அங்கு, அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் முக்கிய இடங்களுக்கு கமல்ஹாசன் தன்னுடன் அன்பறிவ் மாஸ்டர்களை அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனிடம், “விக்ரம் - 2 திரைப்படம் வருமா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல், “நான் வேறு ஒரு புதிய திரைக்கதையை எழுதி வந்திருக்கிறேன்” என விக்ரம் - 2 குறித்த கேள்வியை மறுத்திருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →