ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயண பார்ட் 1 படத்தின் க்ளிம்ஸ் விடியோ 3 நிமிடங்கள் இருக்குமென புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணா உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷ்ஷும் நடித்து வருகின்றனர்.
நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இதன் டீசர் விடியோ நாளை (ஜூலை 3) காலை 11 மணிக்கு வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் க்ளிம்ஸ் விடியோ 3 நிமிடங்கள் இருக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவிருக்கின்றன.
இந்தப் படத்தின் 7 நிமிட மற்றுமொரு க்ளிம்ஸ் விடியோ சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விடியோவில் இந்தப் படம் எப்படி திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும் எனவும் விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் முதல் பாகம் தீபாவளி 2026க்கும் இரண்டாம் பாகம் தீபாவளி 2027லும் வெளியாகுமென முன்பே அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இசையமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
A new update has been released stating that the teaser video of the film Ramayana Part 1, starring Ranbir Kapoor, Sai Pallavi, and Yash, will be 3 minutes long.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.