இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் டீசர் இணையத்தில் கசிந்துள்ளது.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் நடிகர் மாட் டாமன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தி ஒடிசி. இப்படம் , பிரபல கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய ‘த ஒடிசி (the odyssey)' கவிதையைத் தழுவி எடுக்கப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், 1.16 நிமிடம் கால அளவு கொண்ட ஒடிசி படத்தின் டீசரை ஜூராசிக் வொர்ல்ட் - ரீபெர்த் படம் வெளியாகும் (ஜூலை 4) திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், அதற்கு முன்னதாகவே ஒடிசி படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஏகே - 64 அறிவிப்பு எப்போது?
the odyssey movie teaser leaked in social medias
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.