கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான பரமசிவன் பாத்திமா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(ஜூலை 4) வெளியாகிறது.

நடிகர்கள் சத்யராஜ், காளி வெங்கட் கூட்டணியில் உருவான மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் நாளை வெளியாகிறது.

ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்துள்ள குட் வைஃப் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான நகைச்சுவை திரைப்படமான உப்பு காப்புரம்பு, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

ஹிந்தி மொழிப்படமான காலிதார் லாபதா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

ராஜீவ் காந்தியின் ஆவணப்படமான தி ஹெண்ட் திரைப்படம் சோனி லைவ்வில் நாளை வெளியாகிறது.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ரெய்டு - 2 படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஆசாதி, தி வெர்டிக்ட் திரைப்படங்கள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கின்றன.

You can see which movies and web series are releasing this week on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சுஸுகி 2 சக்கர வாகன விற்பனை சரிவு

கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை: எம்எல்ஏ குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT