நடிகர் நிவின் பாலி 
செய்திகள்

8 படங்களில் நிவின் பாலி!

நடிகர் நிவின் பாலி கைவசம் வைத்துள்ள படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் நிவின் பாலி அடுத்தடுத்த 8 படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

மலையாள சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்தவர் நிவின் பாலி. சில படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ‘பிரேமம்’ படம் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானார்.

தொடர்ந்து, ஆக்சன் ஹீரோ பிஜூ படம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதன்பின் நிவின் பாலிக்கு வெற்றிப் படங்கள் எதுவும் அமையவில்லை.

இதற்கிடையே, நிவின் பாலியின் உடல் எடையும் அதிகரித்ததால் பட வாய்ப்புகளும் குறைந்தது. இது அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, உடல் எடையைக் குறைத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் நிவின் பாலி அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, டால்ஃபி தினேஷன், பேபி கேர்ள், சர்வம் மயா, மல்டிவெர்ஸ் மன்மதன், பென்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே நடித்து முடித்த ஏழு கடல் ஏழு மலை, டியர் ஸ்டூடண்ஸ் ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

மேலும், நடிகர் ஃபஹத் ஃபாசில் தயாரிப்பில் ‘பெத்லஹம் குடும்ப யூனிட்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபோக, நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள கேங்ஸ்டர் படமொன்றிலும் நிவின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து தற்போது தன் இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து 8 படங்களை நிவின் கைவசம் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

actor nivin pauly's next movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 3 படங்கள்!

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

கல்குவாரி பிரச்னை: பார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை! உறவினர்கள் மறியல்!

SCROLL FOR NEXT