செய்திகள்

சிவகார்த்திகேயன் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் வெளியீட்டுத் தேதி!

சிவகார்த்திகேயன் ப்ரொடெக்‌ஷன்ஸ் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சிவகார்த்திகேயன் ப்ரொடெக்‌ஷன்ஸ் வழங்கும், நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிப்பில் உருவான புதிய படம் “ஹவுஸ் மேட்ஸ்”. நகைச்சுவைக் கலந்த ஹாரர் திரைப்படமான, இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டைம் டிராவல் குறித்த கதையை மையமாகக் கொண்ட படம் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழுவினர், இது ஒரு ஃபாண்டெசி ஹாரர் காமெடி படம் எனத் தெரிவித்துள்ளனர்.

எஸ். விஜயபிரகாஷ் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

இந்நிலையில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிவகார்த்திகேயன் ப்ரொடெக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The release date of the film ‘House Mates’, presented by Sivakarthikeyan Productions and starring actors Darshan and Kaali Venkat, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்: சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16 கடைசி நாள்

அரியலூா்: 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT