நடிகர் ரிஷப் ஷெட்டி தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னட சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. 2012 ஆம் ஆண்டில் வெளியான துக்ளக் என்கிற கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுககமான ரிஷப் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதில், கருட கமன விருஷப வாகன திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து, காந்தாரா என்கிற படத்தை எழுதி, இயக்கி, நடித்தார். ரூ. 15 கோடியில் உருவான அப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியளவில் ரிஷப் ஷெட்டியைப் பிரபலப்படுத்தியது.
தற்போது, சத்ரபதி சிவாஜி, ஹனுமன் - 2 உள்ளிட்ட பான் இந்திய படங்களில் நடித்து வருவதுடன் காந்தாரா முதல் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளமாகக் கேட்டதுடன் படத்தின் லாபத்திலும் ரிஷப் ஷெட்டி பங்கு கேட்டுள்ளாராம்.
காந்தாராவில் ரூ. 4 கோடி சம்பளம் பெற்றவர் தன் அடுத்தபடத்தில் 25 மடங்கு அதிகமாக சம்பளம் பெறவுள்ளது கன்னட சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் விஜய்யா? சர்ச்சையாகும் புதிய பட டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.