மாரீசன் டிரைலர் அப்டேட்!
மாரீசன் டிரைலர் தேதி அறிவிப்பு...
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்தப் படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 14) மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
மாமன்னன் படத்திற்குப் பின் வடிவேலுவும் ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடிக்கும் படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: தலைவன் தலைவி கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்: விஜய் சேதுபதி
maareesan movie trailer releasing tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.