ரவீந்தர் சந்திரசேகரன். படம்: முகநூல்
செய்திகள்

ரூ. 5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!

மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன் அளித்துள்ளது தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

மும்பையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 5.24 கோடி மோசடி செய்த வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ஆன்லைன் வர்க்கத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாகக் கூறி ரோகன் மேனன் என்பவர் மோசடி செய்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மோசடி செய்யப்பட்டது உறுதியாகிய நிலையில், ரோகன் மேனன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ரோகன் மேனனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், ஆன்லைன் வர்க்க மோசடி விவகாரத்தில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.

இது தொடர்பாக, படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் கூட்டாளிகள் மணிகண்டன் மற்றும் பாண்டி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

தற்போது, ரவீந்திர சந்திரசேகரனை கைது செய்ய போலீஸார் முயற்சி எடுத்தபோது, அவரது உடல்நிலை காரணமாக கைது செய்யாமல், சம்மன் வழங்கி விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதே வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளன.

Mumbai Police has summoned film producer Ravindhar Chandrasekaran in a case of fraud of Rs 5.24 crore on the pretext of high profits in online trading in Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT