பல்டி போஸ்டர்.  படம்: எக்ஸ் / ஷேன் நிகம்.
செய்திகள்

ஷேன் நிகமின் 25-ஆவது படம்... பல்டி ரிலீஸ் தேதி!

மலையாள நடிகர் ஷேன் நிகம் நடித்துள்ள பல்டி படத்தின் வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துள்ள பலடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தற்போது, நாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார்.

தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஷேன் நிகம் தன் 25-வது படதமான பல்டி படத்தில் நடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது.

சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதில், கபடி வீரராக ஷேன் நடித்திருக்கிறார். படம் ஓணம் வெளீடாகத் திரைக்கு வருமெனக் கூறப்பட்டிருந்தது.

தற்போது, ஆக.29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல்டி போஸ்டர்.

The release date of the film Balti, starring popular Malayalam actor Shane Nigam, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம் - 90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்

மழை பாதிப்பு: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

பாதரக்குடிகோயில் கும்பாபிஷேகம்

லாட்டரி சீட்டு விற்பனை: பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT