அவதார் பட போஸ்டர்.  படம்: எக்ஸ் / அவதார்
செய்திகள்

அவதார் 3: புதிய வில்லன் போஸ்டருடன் டிரைலர் தேதி அறிவிப்பு!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் 3 படத்தின் அப்டேட்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார் 3 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

அமெரிக்க இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருள்செலவில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளி வசூல் சாதனையை நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. 

இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.15,000 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவதார் ஃபயர் அன்ட் ஆஷ் ( நெருப்பும் சாம்பலும்) என இதன் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.

தற்போது, இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலரை தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் படத்தின்போது பிரத்தியேகமாக திரையரங்குகளில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது.

அவதார் பட போஸ்டர்.

இந்தப் படத்தின் வில்லனான வராங் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படம் வரும் டிசம்பர் 19ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The trailer release date for the film Avatar 3 fire and ash, directed by James Cameron, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்திவைப்பு

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

இந்திய-சீன எல்லையில் 2 ஆண்டுகளில் 1,000 கிலோ தங்கம் கடத்தல்: அமலாக்கத் துறை

நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி: ராணுவ தலைமைத் தளபதி

SCROLL FOR NEXT