செய்திகள்

பாக்கியலட்சுமி தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

வைரலாகும் பாக்கியலட்சுமி தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாக்கியலட்சுமி தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டப் பெண், சுயமாக முன்னேறி, எப்படி குடும்பத்தைக் கவனிக்கிறாள் என்பதை கருவாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடர் ஒரு சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ், திருப்புமுனைக் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளன.

கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவன் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைவதுபோல் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாக்கியலட்சுமியின் நிறைவு நாள் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், இந்தத் தொடரில் நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT