லால் சலாம் போஸ்டர்.. 
செய்திகள்

ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் லால் சலாம்..! நீண்ட காத்திருப்புக்கு முடிவு!

ஓடிடியில் லால் சலாம் வெளியாவதைப் பற்றி...

DIN

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான லால் சலாம் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று தோல்விப் படமானலும் சுமாரான வசூலைப் பெற்றது. 

லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருந்தார். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ், லிவிங்ஸ்டன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் இதன் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக பரபரப்பு தகவல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

“படத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என பொய் சொல்லக் கூடாது” என்றும் “தயாரிப்பாளர் பணம்தானே? உங்கள் பணமாக இருந்தால் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்வீர்களா?” என்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மகாராஜா இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் திரைக்கதையாளர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடை ஏற்படுத்துறவங்களுக்கு பயம் வரணும் - M.K. Stalin | கல்வியில் சிறந்த தமிழ்நாடு

அடுத்த கல்வி ஆண்டுமுதல் தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்! - Revanth Reddy

இரவின் மடியில்... மேகா சுக்லா!

பாலைவன ஸ்னோபெர்ரி... ஸ்ரேயா!

எங்க அப்பா ஒரு வேளை சாப்பிட்டு போய் படிச்சதால நான் 3 வேளை சாப்பிட்டு ஸ்கூல் போனேன் - Sivakarthikeyan

SCROLL FOR NEXT