செய்திகள்

தம்பிகளா தள்ளிப்போய் விளையாடுங்க... யாரைச் சொல்கிறார் தனுஷ்?

நடிகர் தனுஷ் தன் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்...

DIN

குபேரா இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருந்த படமென்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூன். 1) நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய தனுஷ், “என் திரைப்படங்கள் வெளியாவதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பே என்னைக் குறித்து எதிர்மறையான கருத்துகளைச் சிலர் பரப்ப ஆரம்பிக்கின்றனர். அவர்கள் எவ்வளவு வதந்திகளை பரப்பினாலும் தீப்பந்தம்போல் என் ரசிகர்கள் இருக்குவரை நான் முன்னேறிக்கொண்டே இருப்பேன். தம்பிங்களா, கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க ராஜா... 23 ஆண்டுகள் எனக்கு வழித்துணையாக என் ரசிகர்கள் இருக்கின்றனர். உங்களால் ஒரு செங்கலைக்கூட பிடுங்க முடியாது. எண்ணம்போல் வாழ்க்கை” எனத் தெரிவித்தார்.

இது, ரசிகர்களிடம் வைரலானதுடன் தனுஷ் யாரை மறைமுகமாக விமர்சிக்கிறார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT