செய்திகள்

அனுஷ்கா, விக்ரம் பிரபுவின் காதி வெளியீட்டுத் தேதி!

காதி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

DIN

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்கிறார். பாகுபலிக்குப் பின் சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இதற்கிடையே, தன் உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவைத் தயாரிப்பாளர்கள் மறக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இறுதியாக, அனுஷ்கா நடித்த ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.

தற்போது, இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம்பெற்றிருந்த நிலையில், இப்படம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் Q2 லாபம் 86% உயர்வு!

குளோப் ட்ரோட்டர் ப்ரோமோ பாடல் வெளியானது!

தில்லி கார் வெடிப்பு: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் Q2 நிகர லாபம் ரூ.230 கோடி!

பூடானில் நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT