செய்திகள்

கமல்... கர்நாடகம்... தீராத குழப்பம்!

நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது...

DIN

நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல் இசைவெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையானதால், அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், மன்னிப்புக் கேட்க மறுத்ததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விருமாண்டி, விஸ்வரூபம் படங்களைத் தொடர்ந்து தக் லைஃப் திரைப்படம் வெளியீட்டில் பிரச்னையைச் சந்தித்துள்ளது சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், தக் லைஃப் வெளியீட்டு பிரச்னையைத் தாண்டி கர்நாடகத்திற்கும் கமல் ஹாசனுக்கும் இடையேயான சுவாரஸ்யமான வதந்தியும் நினைவுகூறப்படுகிறது.

நடிகர் கமல் ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி சீனிவாசன். பின்பு, கமல் ஹாசன் எனத் தன் தந்தையால் பெயர் மாற்றம் செய்யப்படுகிறார். கமல் என்பது தாமரையைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தை. ஹாசன் என்பது கமல் தந்தையின் நண்பரும், குருவுமான யாகூப் ஹாசன் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது. கமலுக்கு முன்பே அவரின் சகோதரர்களான சாரு ஹாசன், சந்திர ஹாசன் பெயர்களும் அதன்பொருட்டே வைக்கப்பட்டன. இவர்களின் ஹாசனுக்கான பெயர் காரணம் இதுதான்.

ஆனால், கர்நாடகத்திலிருக்கும் ஹாசன் மாவட்டத்திலிருந்து தமிழகம் வந்ததாலேயே கமல் குடும்பத்தினர் ஹாசன் பெயரை இறுதியாகச் சேர்த்துக்கொள்வதாக நீண்ட காலமாக ஒரு வதந்தி இருக்கிறது. இந்த அடையாளத்தை வேண்டுமென்றே கமல் குடும்பம் மறைக்கிறது எனச் சிலர் அடிக்கடி கருத்து தெரிவிப்பதும் வழக்கம்.

ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை. மத நல்லிணக்கத்திற்காகவே இஸ்லாமியரின் பெயரை எங்கள் தந்தை சூட்டினார் என பலமுறை கமல்ஹாசனே கூறியிருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT