லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் அமீர் கான்!
அமீர் கான் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புதிய படம்....
நடிகர் அமீர் கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்தார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் கைதி - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் அமீர் கான், “நானும் லோகேஷ் கனகராஜும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளோம். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் சூப்பர் ஹீரோ பாணி படமாக இருக்கும். அடுத்தாண்டு இறுதியில் இதற்கான பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமீர் கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதை நடிகர் சூர்யாவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன, ‘இரும்பு கை மாயாவி’யாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: வென்றதா நாயகன் கூட்டணி? தக் லைஃப் - திரை விமர்சனம்!