செய்திகள்

தக் லைஃப் படத்தில் சாதிப்பெயர் நீக்கம்!

சாதிப்பெயரை நீக்கியே தக் லைஃப் படத்தை வெளியிட்டுள்ளனர்...

DIN

தக் லைஃப் முன்னோட்ட விடியோவில் இடம்பெற்ற சாதிப்பெயரைத் திரைப்படத்தில் நீக்கியுள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று (ஜுன். 5) வெளியானது.

படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதால் வணிக ரீதியாக தோல்வியடையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் வசூலாக உலகளவில் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இதற்கு முன், தக் லைஃப் முன்னோட்ட விடியோவில் நடிகர் கமல் ஹாசன் தன்னை, ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என அறிமுகப்படுத்திருந்தார். அப்போது, கமல் ஹாசன் தன் படத்தில் சாதிப்பெயரைக் குறிப்பிடலாமா என விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், திரைப்படத்தில் சாதிப்பெயரை நீக்கியிருக்கின்றனர். நிறைய இடங்களில் ’ரங்கராய சக்திவேல்’ என்றே வசனம் பதிவாகியிருக்கிறது. படக்குழு எடுத்த இந்த முடிவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT