மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங் திரைப்படத்தில் எரியும் பாராசூட்டிலிருந்து 16 முறை குதித்துள்ளார் டாம் க்ரூஸ். யூடியூப்
செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்தார் டாம் க்ரூஸ்!

திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

DIN

மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின், அதிரடியான சண்டைக் காட்சிகளினாலே உலகளவில், மிஷன்: இம்பாஸிபிள் திரைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன.

இந்தப் படங்களுக்கென்று, தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தப் பட வரிசையில் 8வது பாகம் வெளியாகி சர்வதேச அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியான மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையிலும் டாம் க்ரூஸ் இடம்பிடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகனான அவர், தீயில் எரியும் பாரசூட்டின் மூலம் உயரத்திலிருந்து குதிக்கும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தில்...

இதன்மூலம், சுமார் 16 முறை அவர் எரியும் பாராசூட்டிலிருந்து குதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிக முறை எரியும் பாராசூட்டிலிருந்து குதித்த நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்தப் பிரத்யேக சண்டைக் காட்சியை, தென் ஆப்பிரிக்கா நாட்டின் டிராகென்ஸ்பெர்க் நகரத்தில் படம் பிடித்துள்ளனர். சுமார் 75,000 அடி உயரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து டாம் க்ரூஸ் எரியும் பாராசூட்டின் மூலம் குதித்து, அதன் கயிறுகளை அறுத்து, மற்றொரு பாராசூட்டின் மூலம் தப்பிக்கும் படியான ஸ்டண்டுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் பாலிவுட் திரைப்படங்களைப் போன்று பாடல்களுடன் கூடிய படத்தை உருவாக்க நடிகர் டாம் க்ரூஸ் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மன்னிப்புக் கேட்டால் தடை நீக்கம்... மறுத்த சின்மயி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT