தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா குபேரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ராஷ்மிகா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது, படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட டீசர் விடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதில், நாகார்ஜுனா தனது டப்பிங்கை முடித்ததாக படக்குழு எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளன.
இந்தப் படத்துக்கான டப்பிங்கை தனுஷ் இன்னும் முடிக்கவில்லை. பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் இது குறித்த அப்டேட் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.