செய்திகள்

தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பு தரத் தயாராக இல்லை: சேரன்

இயக்குநர் சேரன் தயாரிப்பாளர்கள் குறித்து பேசியுள்ளார்...

DIN

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் சிரமம் குறித்து இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.

இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் கொடுத்தவர். இவர் இயக்கிய பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் உள்ளன.

30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருப்பவர் இறுதியாகத் திருமணம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். அப்படங்கள், நல்ல விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், விஜய் சேதுபதிக்கு படப்பிடிப்பு தேதி இல்லாததால் அப்படம் கைவிடப்பட்டது.

அதன்பின், ஜர்னி (journey) என்கிற இணையத் தொடரை இயக்கினார். அது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற சேரனிடம், “நீங்கள் ஏன் இப்போது படங்களை இயக்கவில்லை?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு சேரன், “நான்தான் படம் இயக்காமல் இருக்கிறேன் என நினைக்கிறார்கள். நான் படம் இயக்க வேண்டும் என மக்கள் விருப்பப்பட்டாலும் தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை. நிறைய நல்ல திரைப்படங்களை இயக்கிவிட்டேன். 4 தேசிய விருதுகளையும் பெற்றுவிட்டேன். ஆனாலும், இப்போது ஏன் தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. தயாரிப்பாளர்களை நாம் தேடிச்சென்றாலும் ஏகப்பட்ட மறைமுக காரணங்களால் நிராகரிப்படுகிறேன்.

சினிமாவில் இறுதியாக நான் என்ன வெற்றி கொடுத்தேன் என்றுதான் பார்ப்பார்கள். இல்லையென்றால், பழைய இயக்குநர், அவரின் மனநிலை நமக்கு ஒத்துவருமா என நினைக்கின்றனர். என் பக்கம் எந்த தவறு இருந்தாலும் நான் சரிசெய்துகொள்வேன். தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நம்பிக்கை கொடுத்து பின்வாங்கி விடுகின்றனர். ஆனால், நிச்சயம் மீண்டும் நல்ல படங்களை இயக்கத்தான் போகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சிறையிலிருந்து வந்து வாக்களித்த எம்பி ரஷீத்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

ராதாகிருஷ்ணன் வெற்றி பெறச் சொந்த ஊரில் சிறப்புப் பிரார்த்தனை!

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

SCROLL FOR NEXT