ஏகே - 64 இயக்குநர் இவர்தானாம்!
அஜித்தின் 64-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது...
நடிகர் அஜித் குமார் நடிக்கும் அவரது 64-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சியின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் மறுமுறை பார்ப்பதற்கான ஆவலையும் ஏற்படுத்தியதால் இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
அதேநேரம், இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி அஜித் அடுத்த கார் பந்தயத்துக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, அஜித்தின் 64-வது படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்விகளும் வட்டமடித்து வருகின்றன. இதற்கான பட்டியலில் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, ஷங்கர், பிரசாந்த் நீல், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் பெயர்கள் இருந்தன.
இந்த நிலையில், ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதாம். குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.