கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிரான இவரது பாடல்களின் மூலம் தனி ரசிகர் பட்டாளமே அவருக்கு உருவாகியுள்ளது.
இந்நிலையில், வேடனின் பாடலான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் மூன்றாம் செமஸ்டர் மாணவர்களுக்கான பாடத்தில், ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை, பிரபல பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் ‘தே டோண்ட் கேர் அபௌட் அஸ்’ எனும் பாடலுடன் ஒப்பிட்டு, இரண்டு பாடல்களின் வரிகள், பாடிய விதம், ஆடல்கள் ஆகியவற்றைக் குறித்து மாணவர்கள் படிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்கல் ஜாக்சனின் பாடலுடன் வேடனின் பாடலை இணைக்க கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், வரும் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடமானது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜன நாயகன் கிளிம்ஸ் விடியோ எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.