அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் தமிழ் டிரைலர்!
சித்தாரே ஜமீன் பர் தமிழ் டிரைலர் வெளியானது...
நடிகர் அமீர் கான் நடித்த சித்தாரே ஜமீன் பர் படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.
லால் சிங் சத்தா திரைப்படத்திற்குப் பின் நடிகர் அமீர் கான் நடித்து முடித்துள்ள திரைபடம் சித்தாரே ஜமீன் பர். (sitaare zameen par)
இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கிய இப்படத்தில், கூடைப்பந்து விளையாட்டின் பயிற்சியாளராக இருக்கும் அமீர் கான், மூளை வளர்ச்சி குன்றிய அணியினருக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்படுகிறார்.
Advertisement
Advertisement
அவர்கள் எப்படியெல்லாம் பயிற்சியாளரைச் சோதிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் கதையாக உருவாக்கியுள்ளனர்.
அமீர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் உண்மையான மூளை வளர்ச்சி குன்றியவர்களையே நடிக்க வைத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணி: படப்பிடிப்பு நிறைவு!
இப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர். தமிழ் வசனங்கள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளன.