தக் லைஃப் படத்தின் போஸ்டர். படம்: ஆர்கேஎஃப்ஐ
செய்திகள்

3,000 காட்சிகள் குறைப்பு: படுதோல்வியை நோக்கி கமலின் தக் லைஃப் திரைப்படம்!

கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் வசூல் குறித்து...

DIN

கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் வசூல் 6-ஆவது நாளில் மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் படம் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.

சமூக வலைதளத்தில் வெளியான கடுமையான விமர்சனத்தினால் படத்தின் வசூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான தக் லைஃப் திரைப்படம் இதுவரை, இந்தியாவில் ரூ.40.95 கோடி மட்டுமே வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியன் -2 திரைப்படத்துக்குப் பிறகு மிகப் பெரிய தோல்வியை கமல் சந்தித்துள்ளார்.

முதல்நாளில் தக் லைஃப் வெளியாகும்போது 4,917 ஷோவ்ஸ் (காட்சிகள்) வெளியானது. 6-ஆவது நாளில் அது 2,089 காட்சிகளாகக் குறைந்துள்ளது.

”கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது” என்று கமல் கூறியதால் இந்தப் படம் கன்னடத்தில் வெளியாகவில்லை. கர்நாடகத்தைத் தவிர்த்து இந்தியா முழுவதும் வெளியானது.

தக் லைஃப் படம் 6-ஆவது நாளில் வெறுமனே ரூ.1.75 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துடன் ஹிந்தியில் வெளியான அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் 4 நாளில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT