துருவ நட்சத்திரம் வெளியீட்டு பணிகளால் வேறு படங்களுக்கு ஒப்பந்தமாகவில்லை என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சில விமர்சனங்கள் எழுந்தாலும் பின்பு நடிகராக அங்கீகாரம் பெற்று ரசிக்கவும் வைக்கிறார்.
நடிப்புக்கு இடையே வெந்து தணிந்தது காடு, ஜோஸ்வா, டோமினிக் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.
ஆனால், இவர் நடிகர் விக்ரமை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் நிதிப் பிரச்னை காரணமாக 8 ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய கௌதம் மேனன், “ துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ஜூலை அல்லது ஆகஸ்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அதுவரை நான் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவோ இயக்கவோ ஒப்பந்தம் ஆகவில்லை. துருவ நட்சத்திரம் வெளியான பிறகே மற்ற பணிகளில் ஈடுபடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நடிகா் டெலிபோன் சுப்பிரமணி காலமானாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.