செய்திகள்

பிசாசு - 2 எப்போது வெளியாகும்? மிஷ்கின் பதில்!

பிசாசு - 2 படத்தின் வெளியீடு குறித்து...

DIN

நடிகை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்த பிசாசு - 2 படத்தின் வெளியீடு குறித்து மிஷ்கின் பேசியுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு  வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பூர்ணா, சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கினார். ஆனால், மூன்று ஆண்டுகளாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே திரைக்கு வருவதில் தாமதமாகி வருகிறது.

ஆண்ட்ரியாவின் பிறந்த நாளன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு 2025 மார்ச் வெளியீடு எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற மிஷ்கின், “பிசாசு - 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரின் உழைப்புக்காக இப்படம் திரைக்கு வர வேண்டும். படத் தயாரிப்பாளர்கள் அதற்கான முயற்சியில்தான் இருக்கின்றனர். என் இயக்கத்தில் உருவான டிரெயின் திரைக்கு வந்தபின் பிசாசு - 2 வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT