கூலி, குபேரா படங்களில் நாகார்ஜுனா. 
செய்திகள்

கூலி, குபேரா பட அனுபவம் பகிர்ந்த நாகார்ஜுனா..!

நடிகர் நாகார்ஜுனா கூலி, குபேரா படங்கள் குறித்து பேசியதாவது...

DIN

நடிகர் நாகார்ஜுனா கூலி, குபேரா படங்களில் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்திலும் சேகர் கம்முலா இயக்கியுள்ள குபேரா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கூலி திரைப்படம் ஆக.14ஆம் தேதியும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதியும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், படப் புரமோஷனுக்காக நேர்காணல் அளித்து வரும் நாகார்ஜுனா பேசியதாவது:

கூலி, குபேரா இரண்டும் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குபேரா இயக்குநர் சேகர் கம்முலா இயல்பாக நடிக்க வேண்டும் என்பார்.

நடை, உடை என எல்லாவற்றிலும் எதார்த்தத்தை எதிர்பார்ப்பார். நான் நடப்பதில் ஹீரோயிசம் இருப்பதாகக் கூறி மாற்றி நடக்கச் சொன்னார்.

லோகேஷ் கனகராஜ் படங்கள் சாதாராண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவை. அவர் என்னை நடக்கும்போது புலி போல் நடக்கச் சொல்லுவார்.

இரண்டு படங்களுமே எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT