மகனுடன் ஆர்.பார்த்திபன்.  
செய்திகள்

இயக்குநராக விரைவில் அறிமுகமாகும் நடிகர் பார்த்திபன் மகன் !

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

DIN

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

ராக்கி பார்த்திபன் !

என் மகன் என் உயிருக்கு நிகர்.

கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜயிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் த்ரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .

விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.

ஓடிடியில் ஏஸ்!

அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart!

அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் விஜயின் மகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் பார்த்திபனின் மகனும் விரைவில் இணைய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT