ராஜமௌலி, காசி செட், மகேஷ் பாபு.  படங்கள்: எக்ஸ், கோப்புப் படங்கள்.
செய்திகள்

ரூ.50 கோடியில் காசி நகரத்தை உருவாக்கும் ராஜமௌலி!

இந்தியாவிலேயே அதிக செலவில் அமைக்கப்பட்டுவரும் திரைப்பட செட் குறித்து...

DIN

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படத்திற்காக ரூ.50 கோடியில் செட் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து ராஜமௌலி புதிய படத்தை இயக்கிவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மகேஷ் பாபுவின் 29ஆவது படமாக உருவாகி வருகிறது. இதற்காக சில காலம் ஜெர்மனியில் மகேஷ் பாபு பயிற்சி எடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமா விஎஃப்எக்ஸ், சிஜிஐ என முன்னேறிவரும் காலத்தில் ராஜமௌலி மீண்டும் பழைய பாணிக்கே திரும்பியுள்ளார்.

ரூ.50 கோடியில் காசி நகரம்

விஎஃப்எக்ஸில் நம்பகத்தன்மை கிடைக்காததால் இந்த மாதிரி செட் அமைக்கிறார்கள். மேலும், அடிக்கடி பயணம் மேற்கொள்ளாமல் இருக்கவும் இந்தமாதிரி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஹைதராபாதில் காசி நகரத்தையே செட்டாக அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை ரூ.50 கோடிக்கு தனியாக ஒரேயொரு செட் அமைத்து இல்லை. அதனால், இந்த காசி செட் எனக் கூறப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளன.

அதிகபட்ச செலவில் அமைக்கப்பட்ட செட்

இதற்கு முன்பாக சஞ்சய் லீலா பஞ்சாலியின் தேவ்தாஸ் மொத்த படமும் ரூ.50 கோடிக்கு குறைவாக செட் அமைக்கப்பட்ட படமாக இருக்கிறது.

பிரபாஸ் நடித்துள்ள ராஜாசாப் படத்திற்காக 6 மாதம் உழைத்து 38,000 சதுர அடியில் செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் பொருட்செலவு குறித்து தகவல் கிடைக்கவில்லை.

தேவ்தாஸ் படத்தில் சந்திரமுகியின் இடத்தை ரூ12 கோடியில் செட் அமைத்திருந்தனர்.

பாஜிராவ் மஸ்தானி, ஹீராமண்டி, பாகுபலி போன்ற படங்களுக்கு ரூ.15-20 கோடி செலவில் செட் அமைக்கப்பட்டுள்ளன.

பாம்பே வெல்வட் படத்திற்காக அனுராக் காய்ஷப் 1960இல் இருந்த மும்பையை இலங்கையில் கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT