நடிகர் ஸ்ரீ 
செய்திகள்

வரவா? புதிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ஸ்ரீ!

நடிகர் ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்...

DIN

உளவியல் சிகிச்சையிலிருந்த நடிகர் ஸ்ரீ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு‘, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவா் நடிகா் ஸ்ரீ. அண்மை காலமாக ஸ்ரீ நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றி, சா்ச்சைக்குரிய வகையிலான காணொலியையும் வெளியிட்டாா்.

இதைக் கண்ட ரசிகா்கள் கடும் அதிா்ச்சியடைந்ததுடன் ஸ்ரீ-க்கு முறையான உளவியல் சிகிச்சை தேவை என்று அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து, நடிகா் ஸ்ரீ-யின் குடும்பம் அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் சர்ச்சையான புகைப்படங்களையோ காணொலிகளையோ வெளியிடவில்லை.

இந்த நிலையில், ஸ்ரீ தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைமுடியைச் சீராக்கி புதிய தோற்றத்திலிருக்கும் புகைப்படத்தை அடையாளப் படமாக வைத்துள்ளார்.

மேலும், ”மே ஐ கம் இன் (May eye come in) எனப் பெயரிடப்பட்ட தன் நாவலை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆண் - பெண் உறவுச் சிக்கலை மையமாகக் கொண்ட இந்த நாவலை அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்திய ஸ்ரீ, ஒரு எழுத்தாளராக மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின்

எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

தவெக தலைவர் விஜய் பிரசாரம் தொடரும்... அட்டவணையில் திடீர் மாற்றம்!

இத்தாலிய நிறுவனத்தை வாங்குகிறது டிவிஎஸ்!

திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்

SCROLL FOR NEXT