சூர்யா 45 படத் தலைப்பு நாளை அறிவிப்பு!
சூர்யா 45 படத்தின் தலைப்பு குறித்து...
சூர்யா 45 படத்தின் தலைப்பு நாளை(ஜூன் 20) அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகிறார்.
படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்.
இந்நிலையில், இப்படத்தின் படத் தலைப்பை நாளை(ஜூன் 20) காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்திற்கு வேட்டைக் கருப்பன் எனப் பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அஜித் - யுவன் சந்திப்பு!