சூர்யா - 46 பெயர் அறிவிப்பு!
சூர்யா - 46 திரைப்படத்தின் முதல் போஸ்டர்...
Updated On : 2 மார்ச், 2026 at 10:24 AM
நடிகர் சூர்யாவின் 46-வது படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி தற்போது சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். இதனை நாக வம்சி தயாரிக்கிறார். கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படமென்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Advertisement
Updated On : 2 மார்ச், 2026 at 10:28 AM
இந்த நிலையில், இப்படத்திற்கு, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இப்படத்தை ஜூலை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
summary