முகப்பு
செய்திகள்

ஆமிர் கானின் சித்தாரே ஜமீன் பர் முதல் நாள் வசூல்!

நடிகர் ஆமிர் கானின் புதிய திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து...

Updated On : 21 ஜூன், 2025 at 10:46 AM
படத்தின் போஸ்டர்...
பகிர்:

பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் நடிப்பில் வெளியான ”சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். வர்த்தக ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல புரட்சிகர கதைகளைத் தேர்ந்து நடித்ததால், மொழியைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம்.

தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் ஆமிர் கான் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், அவரது தயாரிப்பில், திவி நிதி சர்மா எழுத்தில், இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான ”சித்தாரே ஜமீன் பர்” எனும் திரைப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

10 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லி தரும் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.11.7 கோடி வசூல் (உள்நாட்டு) செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படம், கடந்த 2007 ஆம் ஆண்டு ஆமிர் கான் இயக்கத்தில், அவரது நடிப்பில் வெளியான ”தாரே ஜமீன் பர்” எனும் படத்தின் 2-வது பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பீனிக்ஸ் - வீழான்: கானா பாடல் வெளியீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments