நடிகை மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மமிதா பைஜூ. பின்னர், ரெபல் எனும் தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்.
விஜய்யின் ஜனநாயன படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
டூட் (dude) எனப் பெயரிட்டுள்ள இந்தப் படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் குறள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், குறள் கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ள உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.