நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 
செய்திகள்

கூலி - ஹிந்தியில் வேறு பெயர்! ஏன்?

கூலி படத்தின் ஹிந்தி வடிவத்திற்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர்...

DIN

ஹிந்தியில் கூலி திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.

கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தங்கக் கடத்தலை முதன்மைக் கதையாக வைத்து இப்படம் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமான சண்டைக் காட்சியொன்று தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலை நாளை (ஜூன் 25) மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் ஹிந்தி வடிவத்திற்கு, ‘மஸ்தூர்’ (mazdoor - தொழிலாளி) எனப் பெயரிட்டுள்ளனர். காரணம், நடிகர் அமிதாப் பச்சன் கூலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். மேலும், கூலி நம்பர். 1 என்கிற படப் பெயரை நடிகர் வருண் தவான் வாங்கி வைத்திருக்கிறாராம்.

இதனால், கூலி என்கிற பெயரிலேயே இப்படம் ஹிந்தியில் வெளியானால் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், 1983 ஆம் ஆண்டு நடிகர் திலீப் குமார் மஸ்தூர் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

கூலி படத்தில் அமீர் கான் இருப்பதால் ஹிந்தியில் இப்பெயர் மாற்றம் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுத பூஜை: அனல் பறக்கும் பூக்கள் விலை!

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பங்கேற்பு!

கரூர் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

SCROLL FOR NEXT