நடிகர் மணிகண்டன் 
செய்திகள்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மணிகண்டன்!

நடிகர் மணிகண்டனின் அடுத்த படம் குறித்து....

DIN

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உருவெடுத்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதையாளர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமையாளனரான மணிகண்டன் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிங்கு பெரியசாமி நடிகர் சிம்புவின் 50-வது படத்தை இயக்க நீண்ட காலமாகக் காத்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து அப்படம் தள்ளிப்போவதால் சிறிய படமொன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

எல்லோருக்கும் நல்லவர்!

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

SCROLL FOR NEXT